பிக் பாஸ் 3 இன் வார இறுதி நேற்று மிக மோசமான ஒருநாளாக இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவும், ஷெரினும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல் ஹாசன், மிஞ்சி இருந்தது தர்சன் மட்டுமே.. கமல் ஹாசன் காட்டிய எவிக்ஷன் கார்டில் தர்ஷன் பெயரே இடம் பெற்றிருந்தது.
பலருக்கும் இது ஷாக்காக இருக்க, வெளியேறினார் தர்ஷன், உண்மையிலேயே பிக் பாஸ் டைட்டிலை இவர்தான் வின் பண்ணுவார் என அனைவரும் சொல்லிவந்தனர். இந்தநிலையில் இப்படி ஏற்பட்டது பலருக்கும் வருத்தமாகவே உள்ளது.
வெளியேறும்போது சாண்டி தர்ஷனின் மெடலை வாங்கிக் கொண்டார். அப்போது அவர், “3ஆவது வாரம் சென்றவர்களும் மெடலை உடைத்துவிட்டு செல்கிறார்கள், அது போன்று 100 நாட்கள் இருந்தவர்களும் உடைத்துவிட்டு செல்ல வேண்டுமா? இதெல்லாம் நியாயம் இல்லை குருநாதா. மெடலை உடைக்க முடியாது. நானே வைத்துக் கொள்கிறேன் என்று ஆதங்கமாக கூறினார் சாண்டி.
ஆனால், பிக் பாஸ் சாண்டியின் வேண்டுகோளை ஏற்கவில்லை. மெடலை உடைத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார். வனிதா விஷயத்தில் மட்டுமே பிக் பாஸ் வேண்டுகோளை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.