கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் புகழ் பெற்ற நடிகை திவ்யா உன்னிக்கு இரண்டாவது கணவர் மூலம் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு கதிர் சுந்தர் என்பவரை திருமணம் செய்த நடிகை திவ்யா உன்னி பின்னர் 2016ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு திவ்யா உன்னி அருண்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்
திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான திவ்யா உன்னி, சமீபத்தில் கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் சமூக தளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி உள்ளது