எம் எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவரின் முழு பெயர் முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் என்பதாகும். ஆரம்பத்தில் நாடகக் குழுவில் சேர்ந்து நாடக கலைஞராகவே தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் எம் எஸ் பாஸ்கர்.
1987 ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 1990களில் பல சிறிய வேடங்களில் நடித்தார். எங்கள் அண்ணா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சினிமா மட்டுமின்றி 2000களில் முற்பகுதியில் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் எம்எஸ் பாஸ்கர்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி மற்றும் அரசி ஆகிய தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததனால் இவரை பல வருடங்களாக பட்டாபி என்று மக்கள் அழைத்தனர். சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங், ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார் எம் எஸ் பாஸ்கர்.
எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் ஐஸ்வர்யா பாஸ்கர் என்ற மகளும் இருக்கின்றனர். ஆதித்யா பாஸ்கர், விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து பிரபலமானவர். இது தவிர hotspot போன்ற பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் ஆதித்யா பாஸ்கர். எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர். தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால் ஐஸ்வர்யா பாஸ்கர் அவர்களின் வளைகாப்பு விழாவாகும். இந்த படங்களை தனது insta பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கர்.