விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பீட்சா, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து வயசானவர் இளமை என எல்லா கதாபாத்திரங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிகாட்டி குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.
நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்விஜய் சேதிபதி. விஜய்க்கு எதிராக மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்தார். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் மிகவும் யதார்த்தமாக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துவரும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு பிரஸ்மீட்டில் சூர்யா சேதுபதி வாயில் பபுள்கம் மென்றபடியே ஆட்டிட்யூடாக நடந்து கொண்டார். இது வலைதளத்தில் பேச்சு பொருளாகி பலர் ட்ரோல் செய்தனர். இதைப்பற்றி பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தனது கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், விஜய் சேதுபதி தன் மகன் விஷயத்தில் தந்தையாக அவர் கடமையை சரியாக செய்யவில்லை. ஒரு பொது நிகழ்ச்சியில் எப்படி அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் மகனுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. அவரிடம் யாராவது கேட்டால் சிம்பு இப்படித்தான் ஆரம்பத்தில் வரும் போது பல விமர்சனங்களை சந்தித்தார் இப்போது அதையெல்லாம் தாண்டி அவர் பெரிய அளவில் இருக்கிறார். அதேபோல் என் மகனும் விமர்சனங்களை தாண்டி வந்துவிடுவார் என்று கூறியிருக்கிறார். இது சரியல்ல என்று பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.
