இன்று 92வது பிறந்த நாள் காணும் நடிகர் திலகம்

நடிகர் திலகம் மறைந்து 19 வருடங்கள் ஆகி விட்டது . ஏதோ நேற்று நடந்த நிகழ்வு போல இருக்கிறது. காலங்கள் மிக வேகமாக உருண்டோடிவிட்டது. இன்று நடிகர் திலகம் அவர்களின் 92வது பிறந்த நாள்…

நடிகர் திலகம் மறைந்து 19 வருடங்கள் ஆகி விட்டது . ஏதோ நேற்று நடந்த நிகழ்வு போல இருக்கிறது. காலங்கள் மிக வேகமாக உருண்டோடிவிட்டது. இன்று நடிகர் திலகம் அவர்களின் 92வது பிறந்த நாள் ஆகும் . அவர் இறந்து 19 வருடங்கள் ஆனாலும் அவர் நடித்த படங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்றும் மறக்க முடியாது.

160b2aa5903b7594e4a9b99620092b44-2

பாசமலர் படம் போலவும், பாவமன்னிப்பு, பாலும் பழமும் போல படங்கள் இனி வரவா போகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு இது போல படங்கள் அவர்களின் இனிமையான நினைவுகளாக சுழன்று கொண்டே இருக்கிறது.

நவராத்திரி என்ற திரைப்படத்தில் 9 வேடங்களில் வசதிகள் இல்லாத அக்காலத்திலேயே நடித்ததை மறக்க முடியுமா? திருவருட்செல்வர் என்ற படத்தில் அப்பராக வயது முதிர்ந்த தோற்றத்தில் உள்ளம் உருக செய்யும் நடிப்பை சிவாஜி போன்றவர்களால்தான் தர முடியும்

இரண்டாவது தலைமுறையான எண்பதுகளின் தலைமுறையிலும் இவர் நடித்து ஹிட் செய்த முத்தான முதல் மரியாதை படத்தை மறக்க முடியுமா.

பருவ வயது பெண்ணுடன் இவர் நாகரீகமாக செய்த காதலும் அது சார்ந்த காட்சிகளை என்றும் மறக்க முடியாது.

தேவர் மகன் படத்தில் பெரிய தேவராக நடித்ததை மறக்க முடியுமா

மூன்றாவது தலைமுறை நடிகர்களான விஜய் போன்றவர்களுடன் நடித்த ஒன்ஸ்மோர் போன்ற திரைப்படங்களை மறக்க முடியுமா.

சிவாஜி கணேசனை பற்றி எத்தனையோ பேர் சிலாகித்து எழுதி விட்டார்கள், அவரின் நடிப்புத்திறன் தெரியாத நபர்களே இல்லை எனலாம். அவரை பற்றி பி ஹெச் டியே செய்யுமளவு விசயங்கள் அதிகம் உண்டு.

எல்லா புராண இதிகாச படங்களிலும் சிவாஜி கணேசன் அவர்கள் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து விட்டார்கள்.

இன்று அக்டோபர் 1 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன