இந்த டிவிக்கள் எப்போ பார்த்தாலும் கொரோனா அப்டேட் கொடுத்து மக்களை பீதியில் வைத்துள்ளது உண்மை. மனதுக்கு இனிய பழைய திரைப்படங்கள்,பாடல்கள் போன்றவற்றை எல்லோரும் மன அழுத்தத்தால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் இந்த நிலையில் அதை ஒளிபரப்பாமல் புள்ளிங்கோ டைப் பாடல்கள் படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது.
இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அரசு தொலைக்காட்சியான தூர்தசனில் 80ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாத ராமானந்த சாகரின் இராமயணம் தொடர் நாளை முதல் ஒளிபரப்பபட இருக்கிறது.
கடந்த 1987ம் ஆண்டு முதல் 88 வரை ஒளிபரப்பான இந்த சீரியலை பலராலும் மறக்க முடியாது என்பது உண்மை.
எல்லோரும்வீட்டில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பபடுகிறது.