கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக நடிகர்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அஜீத், சிவகார்த்திகேயன்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் மிகப்பெரும் தொகையினை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அதன் நிர்வாக அதிகாரி கல்பாத்தி அர்ச்சனாவால் ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக 65 லட்சம் கொரோனா நிதியாக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.