‘தளபதி 65’ இயக்குனர் யார்? உறுதி செய்யப்பட்ட தகவல்

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் பட்டியலில் மொத்தம் ஐந்து இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ். இவர்தான் ‘தளபதி 65’படத்தை இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு…


e3be6aa991c78054645ebe033581f632

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் பட்டியலில் மொத்தம் ஐந்து இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ். இவர்தான் ‘தளபதி 65’படத்தை இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்றும் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முடிவடையும் என்றும், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில்‘தளபதி 65’படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

வரும் பொங்கலில் தர்பார் படம் ரிலீஸாக உள்ள நிலையில் அதன் பின்னர் தளபதி 65 படத்தின் முழு பணியில் ஈடுபட ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டதாகவும் ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன