விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் உள்பட ஒரு சில வில்லன் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு வில்லன் நடிகர்கள் இணைந்து உள்ளனர்
அவர்கள் மகாநதி சங்கர் மற்றும் சாய்தீனாஆகியோர்கள் ஆகும். இந்த படத்தில் விஜய் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்கு நான்கு வில்லன்கள் கமிட்டாகி உள்ளனர் என்பதும் இன்னும் ஒரு வில்லன் நடிகர் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஒரு படத்தில் வில்லன் கேரக்டர் வலிமையாக இருந்தால் அந்த படத்தில் ஹீரோவின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் என்பதால் தளபதி 64 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.