தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரமோஷன் மற்றும் வியாபார பணிகளும் நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமைகளீன் வியாபாரம் முடிந்து விட்டதை அடுத்து வெளிநாட்டு உரிமைகள் மற்றும் தமிழக, பிற மாநில உரிமைகளின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தங்களது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்
இந்த அறிவிப்பு தளபதி ரசிகர்களின் புத்தாண்டு பரிசாக கருதப்படுவதால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது