தமிழ் சினிமாவின் 68 வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் விஷால் சைக்கிளில் எளிமையாக வந்து அனைவரையும் ஆச்சரியமடைய செய்தார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காகவும் நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்காகவும் நடிகர் நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து மற்ற பணிகளுக்கு பயன்படுத்த போவதாகவும் அறிவித்திருந்தனர். இது மட்டுமில்லாமல் அந்த கலை நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து நடிக்க உள்ளதாக உறுதி அளித்து இருப்பதாக நடிகர் கார்த்தி கூறியிருந்தார்.
இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு எதிராக தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி விசாரிப்பதற்காகவும் வழிகாட்டுவதற்காகவும் நடிகை ரோகினி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டுடன் நிறைவு அடைய உள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதை பற்றியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் மறுபடியும் தேர்தல் நடத்தினால் ஏகப்பட்ட பொருட்செலவு நஷ்டம் ஏற்படும் என்பதால் மீண்டும் மூன்று வருடங்கள் ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களின் பதவி காலத்தை நீட்டித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி இந்த பொதுக்குழு கூட்டத்தை பற்றி பேசும்போது நடிகர் விஜய் அவர்கள் நடிகர் சங்க நலனுக்காக கடனாக இல்லாமல் நிதியாக மட்டுமே ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார். இதை மக்கள் விஜய் அவர்கள் சத்தமின்றி உதவிகளை செய்து வருவதாக பேசி வருகின்றனர்.