நடிகர் கமல்ஹாசன் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நேரு உள் விளையாட்டரங்கில் கமல்ஹாசனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
ரஜினி, கமல்,இளையராஜா பார்த்திபன், கார்த்தி, விஜய் சேதுபதி, தமன்னா, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ரஜினி, இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வருவது கடினமான விசயம். 60 ஆண்டு கால திரைப்பபயணம்என்பது சாதாரண விஷயம் இல்லை. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.
ஒரு கவுரவமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன். அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். அந்த குழந்தையுடன், படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம். என்று ரஜினி விழாவில் பேசினார்.