தனுசுக்கு 6 மணிக்கும் விஜய்க்கு 7 மணிக்கும் என டுவிட்டரில் டைம் குறிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் பெரும் பரபரப்பை அடைந்துள்ளனர்
தனுஷ் நடித்து வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்று ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது
அதேபோல் விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று இரவு 7 மணிக்கு வெளிவரும் என்று அந்தப் படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்
எனவே ஒரே நாளில் அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் தனுஷ் மற்றும் விஜய் படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் டுவிட்டர் இணையதளம் பெரும் பரபரப்பில் உள்ளது
தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியும், தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியும் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது