isha

5 பேருல ஒருத்தர் நீ… இசை அமைக்க தயாரா? தயக்கமே இல்லாமல் இளையராஜா ஒத்துக் கொண்டது இதுக்குத்தானா?

ஒரு படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறாங்க. இளையராஜா அந்தப் படத்தை எப்படி ஒப்புக்கொண்டார்? அந்தப் படத்துக்கு பின்னணி இசை யாரு? ஏஎல்.ராகவன் தயாரிப்பு, தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான படம் கண்ணில் தெரியும்…

ஒரு படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறாங்க. இளையராஜா அந்தப் படத்தை எப்படி ஒப்புக்கொண்டார்? அந்தப் படத்துக்கு பின்னணி இசை யாரு?

ஏஎல்.ராகவன் தயாரிப்பு, தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான படம் கண்ணில் தெரியும் கதைகள். இந்தப் படத்துல தான் 5 இசை அமைப்பாளர்கள். இளையராஜா, கேவி.மகாதேவன், சங்கர் கணேஷ், பி.ஆர்.பாப்பா, ஜி.கே.வெங்கடேஷ். இந்த 5 பேரும் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இளையராஜா இசை அமைத்துள்ளார்.

கதைகளம் ரொம்பவே வித்தியாசமானது. செந்தாமரை ஊர் நாட்டாமையாக இருக்கிறார். அந்த ஊரில் தன்னைத் தவிர வேறு யாருமே நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறார். அந்த ஊருல 100 ரூபாய் நோட்டை வச்சிக்கிட்டு 10 பைசா செலவு இல்லாம 10 பேரோட சொத்தை எழுதி வாங்கிடுவாரு.

கடன்காரனாக உள்ள தந்தையை அவமானப்படுத்துகிறார் செந்தாமரை. அவரைப் பழிவாங்கும் வகையில் கடன்காரனின் மகன் சரத்பாபு வெளியூருல போய் படிச்சிட்டு வந்து செந்தாமரையைப் பழிவாங்க வருவாரு. செந்தாமரையின் மகள் ஸ்ரீபிரியாவுக்கு சரத்பாபு மேல காதல்.

அதே நேரம் சரத்பாபுவுக்கு வெள்ளந்தியா ஆடு மேய்க்கும் வடிவுக்கரசி மேல் காதல். இது ஒரு முக்கோண காதல் கதை. கடைசியில் செந்தாமரையை சரத்குமார் பழிவாங்கினாரா? ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி ஆகிய இருவரில் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதுதான் கதை.

5 பாடலில் 1பாடல் சூப்பர்ஹிட். அதுவும் இளையராஜாவின் இசையில் மலர்ந்ததுதான். ”நான் ஒரு பொண்ணோவியம் கண்டேன் எதிரே… இளமை… புதுமை…” என்ற காதல் பாடல் இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். எஸ்பிபி, பி.சுசீலா, ஜானகி பாடியது. இதை எழுதியவர் புலமைப்பித்தன்.

அதே போல ”நான் உன்னை நினைச்சேன். நீ என்ன நினைச்சே” என்ற பாடல் செம மாஸ். கவிஞர் வாலி எழுதினார். ஜிக்கி, வாணிஜெயராம், எஸ்பிபி இணைந்து பாடியது. சோகப்பாடலாக இருந்தாலும் இது சக்கை போடு போட்டது. இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் பேசப்பட்ட படம். இந்தப் படம் நட்டம்தான். இது 1980ல் வெளியானது.

பீக்கில் இருந்த காலகட்டத்தில் இளையராஜா இந்தப் படத்துக்கு எப்படி ஒத்துக் கொண்டார்? இந்தப் படத்தை இயக்கியது தேவராஜ்மோகன். இவர்தான் இளையராஜா இசை அமைத்த அன்னக்கிளியை இயக்கினார். அவர் தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தையும் இயக்கினார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இளையராஜா இந்தப் படத்துக்கு ஒரு பாடல் மட்டும் அல்லாமல் கூடுதலாக பின்னணி இசை அமைக்கவும் ஒத்துக்கொண்டாராம்.