பெரும்பாலான திரைப்படங்களில் காவலர்கள் இல்லாத தமிழ் திரைப்படங்களே இருக்காது. அந்த அளவுக்கு போலீசிற்கு எல்லா திரைப்படத்திலும் முக்கியத்துவம் இருக்கும்.
இந்நிலையில் சிறைச்சாலைகளை எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறி உள்ளது. முழுக்க முழுக்க சிறைச்சாலையிலேயே அதாவது கைதிகளுடைய வாழ்க்கையை மையமாக வைத்து படமாக எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்து கிடையாது.
இந்த தொகுப்பில் 5 முக்கிய மிரட்டும் ஜெயில் கதை கொண்ட திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை.
ஜெயில் கதையில் முதல் இடத்தை பிடித்திருப்பது ஜெய் பீம் திரைப்படம். 1993ஆம் ஆண்டு ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெய் பீம். இதில் இருளர் ஜாதியைச் சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை படமாக்கப்பட்டிருக்கும்.
ராஜாக்கண்ணு திட்டமிடப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு, செய்யாத தப்பு ஒத்துக்கொள்ள வைத்து போலீசாரால் வற்புறுத்தப்படுவார். தன்னுடைய கணவருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சூர்யா அவர்களிடம் உதவி கேட்டு எப்படி போராடி நீதியை வாங்கி கொடுக்கிறார் என்பது தான் இந்த படத்தின் முழுக்கதை.
இரண்டாவதாக பார்க்கப்போகும் திரைப்படம் மகாநதி. இந்த படத்தில் 14 வருடம் ஆயுள் தண்டனை அனுபவிக்கக்கூடிய கைதியாக கமல் நடித்திருப்பார். சிறைக்கு சென்ற பின் அவருடைய மகள், மகன் படும் கஷ்டத்தையும்,இரண்டு குழந்தைகளும் பாதை மாதிரி எந்த அளவுக்கு சித்திரவதை அனுபவித்தார்கள் என இந்த ஒரு திரைப்படத்தில் பார்க்கலாம்.
ஆயுள் தண்டனை அனுபவித்து கமல் திரும்பி வந்து தன்னுடைய மகள் மற்றும் மகனை மீட்டெடுப்பது தான் படத்தின் மீதி கதை. ஒரு சிறை கைதியுடைய வாழ்க்கை மற்றும் அவர்களுடைய குடும்பம் எந்த அளவுக்கு சீரழிந்து கஸ்டப்படுவதை இந்த ஒரு திரைப்படத்தில் தெள்ளத் தெளிவாக காட்டிருப்பாங்கள்.
மூன்றாவதாக பார்க்க போகும் திரைப்படம் ஒரு கைதியின் டைரி. பாரதிராஜா அவர்களுடைய இயக்கத்தில் கமல், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஒரு கைதியின் டைரி. 175 நாட்கள் வரைக்கும் திரையரங்குகளில் வசூலில் சக்க போடு போட்ட இந்த படம் சிறைச்சாலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். ஒரு அரசியல் வாதியின் சுய நலத்தால் ஜெயிலில் தள்ளப்பட்டு பின் வெளிவந்து அவரை பழிவாங்கும் கதையாக படம் அமையும்.
நான்காவதாக நாம் பார்க்கும் திரைப்படம் சிறைச்சாலை. இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மோகன் லால், பிரபு, தபு என முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் மோகன்லால், பிரபு என இரண்டு பேருமே இந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கொடுமையான சிறைவாசம் அனுபவிப்பவர்கள். ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுக்கிற இவங்களுடைய முதுகில் அயன் பாக்ஸை வைத்து தோலோடு தோலா சுட்டெடுக்கும் காட்சிகள் இந்த ஒரு கொடுமை எல்லாம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஆங்கிலேயர் சிலையை கண் முன்னாடி காட்டி பயமுறுத்தி இருப்பார்கள்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளை கடிதம் மூலம் ஊக்கப்படுத்திய விஜய்! என்ன மனசு சார் அவருக்கு…
இறுதியான ஜெயில் திரைப்படம் விசாரணை. சந்திரகுமார் அவர்களுடைய உண்மையான அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட லாக்கப் நாவலுடைய திரை வடிவம் தான் விசாரணை. இந்த படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகள் நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தரமான படமாக வெற்றிமாறன் அவர்கள் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டேஷன், லாக்கப் அப்படி என இந்த படம் அமைந்திருக்கும்.
எந்த தப்பும் செய்யாத நான்கு இளைஞர்களை விசாரணை என கைது செய்து அவர்களை சித்திரவதை செய்து போலீசாரே அவர்களை கொலையும் செய்து விடுவார்கள். இந்த படத்தில் போலீஸ் கைதிகளை அடிக்கிற ஒவ்வொரு அடியும் படத்தை பார்க்கும் நம் மேல் விழுகிற மாதிரியான உணர்வு ஏற்படுத்தும். இதே மாதிரி தான் விடுதலை திரைப்படத்திலும் வெற்றிமாறன் அவர்கள் புகுந்த விளையாடி இருப்பார்.