மாமதுரை அன்னவாசல் திட்டம்- சூர்யா 5 லட்சம் உதவி

கொரோனா ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருவோரம் ஆதரவற்ற முதியவர்கள் பலரும் இந்த கொரோனாவால் சரியான சாப்பாடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக மாமதுரை அன்னவாசல் என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.…

கொரோனா ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருவோரம் ஆதரவற்ற முதியவர்கள் பலரும் இந்த கொரோனாவால் சரியான சாப்பாடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

9e17fa0e0df88936f468f62bbefaed81

இந்த நிலையில் மதுரையில் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக மாமதுரை அன்னவாசல் என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பலரும் தங்கள் பங்களிப்பை இத்திட்டத்துக்கு வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தில்  நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதற்கு மதுரை எம்.பி சு .வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன