நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர். இவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன். ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு நடிகையை காதலித்து வருகிறார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல உயிரே படத்தில் தைய தையா பாட்டுக்கு ஆட்டம் போட்டிருப்பாரே அவர்தான் பிரபலமான ஹிந்தி நடிகையான இவரின் பெயர் மலைக்கா அரோரா என பலருக்கும் தெரிந்திருக்கும்.
இவருக்கு திருமணமாகி நான்கு வருடம் முன்பு விவாகரத்தாகி விட்ட நிலையில் 33 வயது ஆன அர்ஜூன் கபூரை காதலிக்கிறார். மலைக்கா அரோராவுக்கு 16 வயதில் மகன் இருக்கிறான் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அர்ஜூன் கபூரை திருமணம் செய்ய இருக்கிறாராம் மலைக்கா.
ஹிந்தி நடிகைகள் தன்னை விட 10 வயது 12 வயது குறைந்தவர்களை காதலிப்பது மணப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது, பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், வரிசையில் மலைக்காஅரோராவும் இணைந்துள்ளார்.