43 வருடங்களை கடந்த அன்னக்கிளி திரைப்படம்

By Staff

Published:

கடந்த 1976ல் மே 14ல் சிவகுமார், சுஜாதா நடித்த அன்னக்கிளி திரைப்படம் வெளியானது. தேவராஜ் மோகன் என்ற இரட்டை இயக்குனர்கள் இப்படத்தை இயக்கி இருந்தார்கள். இப்படத்தின் மூலம்தான் இளையராஜா என்ற மாபெரும் இசைக்கலைஞர் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு கிடைத்தார்.

ef21eacde7b2e45f9d61289f3d1fb3d6

காலம் சென்ற திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் இப்படத்தை தயாரித்து இருந்தார்கள்.படத்தின் கதையை இப்பட இயக்குனர்கள் திறம்பட இயக்கி இருந்ததால் சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான தேசிய விருதை இப்படம் பெற்றது.

முதல் பாடலான மச்சானை பார்த்திங்களா தொடங்கி, சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அன்னக்கிளியே உன்னை தேடுதே, போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்றன.

முக்கியமாக முத்து சம்பா பச்ச நெல்லு குத்ததான் வேணும் என்ற பாடல் அந்நாளைய திருமண வீடுகள் அனைத்திலும் போட்டி போட்டு ஒலித்த பாடல்கள் ஆகும்

முதல் படத்திலேயே டாப் கியரில் பறந்தார் இளையராஜா. இப்படத்தின் பிரதானமாக பேசப்பட்டதே இசையும் பாடல்களும். ஆனால் அப்போதும் கூட இன்று முன்னணியில் இருக்கும் ஒரு பத்திரிக்கை தங்களது விமர்சனத்தில் இசைஞானி இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாதது வருத்தமான விசயமாக பார்க்கப்பட்டது.

சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன் இப்படத்தில் நடித்தனர்.

பல சிறப்புகளை கடந்த அன்னக்கிளி நாளையுடன் 43 வயதை அடைகிறது.

Leave a Comment