1980ம் ஆண்டு வெளியானது நிழல்கள் திரைப்படம். பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்தான் இது ஒரு பொன்மாலை பொழுது பாடல். இப்பாடல் எழுதி 40 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இதை நினைவுபடுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்துவை பாராட்டும் வகையில் இயக்குனர் சீனு ராமசாமி ஒரு டுவிட் செய்துள்ளார் அதில்,
இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் புலர்ந்து இன்றோடு நாற்பதாண்டுகள் நிறைவடைந்து விட்டது,நான்கு தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் முன்னிலை கவிஞராகத் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் இலக்கிய வரலாறு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.. என கூறியுள்ளார்.