நடிகர் விவேக் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் பணியிலிருந்தவர் விவேக்.
தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆரம்ப கால விவேக் காமெடிகள் அவரின் தோற்றம் எல்லாம் வேறு மாதிரி இருக்கும்.
மிகவும் ஒல்லியான தேகத்துடன் விவேக் நடித்த ஆரம்ப கால படங்கள் அதிகமாக ரசிக்கும் வகையில் இருக்கும்.
அப்படியாக விவேக் நடித்த ஒரு குறும்படம்தான் நாட்டை திருத்த போறோம். இதில் ஒரு விரல் கிருஷ்ணாராவ், இடிச்சபுளி செல்வராஜ் உள்ளிட்டவருடன் நடித்துள்ளார். இந்த படத்தை நினைவு கூர்ந்துள்ள விவேக் அதை பகிர்ந்துள்ளார்.