31 வருடத்தை நிறைவு செய்த அபூர்வ சகோதரர்கள்

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வந்த படம் இது.80களில் வந்த திரைப்படங்களில் வரும் வழக்கமான பழிவாங்கல் கதைதான் இது என்றாலும் இப்படத்தில் குள்ளமான கமல் பாத்திரம் ரசிகர்களை…

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வந்த படம் இது.80களில் வந்த திரைப்படங்களில் வரும் வழக்கமான பழிவாங்கல் கதைதான் இது என்றாலும் இப்படத்தில் குள்ளமான கமல் பாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது.

db80d169cbdceab4c4becb0b7c9a6de9

படம் வந்த புதிதில் பேச்சு வழக்கில் குட்டை கமல், நெட்டை கமல் என ரசிகர்கள் சொல்வர். ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு திரைப்படம் இதுவாகும்.

da0429b1683c9cba9b6a099417dc6c5d-2

குள்ளத்தனமாக இருந்து கொண்டே கொடூர கொலைகளை அரங்கேற்றும் பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.

ஒவ்வொரு வில்லனையும் கமல் கொல்லும் காட்சிகள் அனைத்திலும் வித்தியாசப்படுத்தி இருந்தார் இயக்குனர்.

இசைஞானி இளையராஜா பாடல்களில் பிரமாதப்படுத்தி இருந்தார். ராஜா கைய வெச்சா, வாழ வைக்கும் காதலுக்கு ஜே, உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் என எல்லா பாடலும் ஏ 1 ரகம். கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார்.

புலி வேஷம் போட்டு கமல் ஆடிய அண்ணாத்தே ஆடுறார் பாடல்தான் அடுத்த சில ஆண்டுகள் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் குழந்தைகள் புலி வேஷம் போட்டு ஆடும் பாடலாக இருந்தது.

மனோரமா, நாகேஷ், நாசர், டெல்லிகணேஷ், ஜெய்சங்கர்,ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இப்படம் இன்று வரை கமல் ரசிகர்களுக்கு மறக்க முடியாத படம்.

இப்படத்தில் ஜனகராஜ், ஆர்.எஸ் சிவாஜி உள்ளிட்டோரின் காமெடியும் பெரிய அளவில் ரீச் ஆனது. சார் நீங்க எங்கயோ போயிட்டிங்க என்ற வசனம் புகழ்பெற்றது.

கமல் என்னதான் பல படங்களில் பல வித வேஷம் போட்டு கஷ்டமாக நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்களிலேயே அவர் கடினமாக நடித்த வேடம் அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் வேடம்தான்.

இப்படத்தின் வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் கலைஞர் கலந்து கொண்டு விருது கொடுத்து வாழ்த்தினார்.

கடந்த 1989 ஏப்ரல் 14ல் இப்படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் 31 வருடங்கள் ஆகிறது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன