தனுஷ் நடிக்க உள்ள 44 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக 31 வயது நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மணிரத்னம் நடித்த ’ஓகே கண்மணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த திறமையான நடிகைகளில் ஒருவரான நித்யா மேனன்தான் தனுஷின் 44வது படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது
இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது தனுஷ் ஏற்கனவே 41 வயது உள்ள மஞ்சுவாரியர், 38 வயதுள்ள சினேகா ஆகியோர்களுடன் தனுஷ் சமீபத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது