கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கடந்த மார்ச்சில் இருந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில், விமானம், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ரயில்களை இயக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக முன்பதிவும் அரசு செய்ய சொல்லி இருந்தது

இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி உட்பட பலர் வைத்த கோரிக்கை என்னவென்றால் ரயில் சேவைகளை நிறுத்தி வைக்க சொன்னதுதான்.
கொரோனா கட்டுப்பாட்டில் இதுவரை வரவில்லை. அதனால் இந்த சேவைகளை தொடர இயலாமல் வரும் ஜூன் 30 வரை ரயில் சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.