யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கும் 3 குரங்குகள்.. நயன்தாரா சொன்னதை முழுமையாக கவனித்தீர்களா?

By Keerthana

Published:

சென்னை: “என்னை பற்றி வதந்திகளை பேசும் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திரையுலகில் பெரிய பிரபலங்கள் இல்லை. அவர்கள் 50 எபிசோடுகள் வெளியிட்டிருந்தால் குறைந்தது 45 எபிசோடுகளில் என்னை பற்றி பேசியிருப்பார்கள்.. அவர்கள் வதந்திகளை பேசி சம்பாதிக்கின்றனர். இந்த 3 நபர்கள் 3 குரங்குகள் போன்றவர்கள் என்று நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறினார். அவர் கூறியது அந்த 3 பேர் யார் என்று பார்ப்போம்.

நடிகை நயன்தாரா, நடிர் தனுஷ் குறித்து காட்டமாக அறிக்கை வெளியிட்ட பின்னர் பேசுபொருளாக மாறினார். அவரை பற்றி பல்வேறு சினிமா யூடியூப்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சில யூடியூப்கள் கிசுகிசுக்களையும் வெளியிட்டு வருகின்றன. இதுபற்றி நயன்தாரா முதல்முறையாக பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை நயன்தாரா அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், “நான் தவறு செய்தால் மட்டுமே பயப்படுவேன். வேண்டுமென்றே விளம்பரத்திற்காக ஒனறும் ஒருவரை விமர்சிக்கவில்லை. நாங்கள் ஆவணப்படத்தில் 4 வரி வசனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று தனுஷ், தனுஷ் மேலாளர், அவரது நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டேன்… ஆனால் பேச முடியவில்லை” என்றார்.

அடுத்ததாக நயன்தாரா தன்னை பற்றிய வதந்தி குறித்து பேசுகையில், “என்னை பற்றி வதந்திகளை பேசும் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய பிரபலங்கள் இல்லை. அவர்கள் 50 எபிசோடுகள் வெளியிட்டிருந்தால் குறைந்தது 45 எபிசோடுகளில் என்னை பற்றி பேசி இருப்பார்கள். என்னை பற்றியே எப்போதும் அவர்கள் பேச என்ன காரணம் எனறு நான் விசாரித்த போது, என்ன பற்றி பேசினால் பணம் வரும் என்பது தெரியவந்தது. என்னை பற்றி பேசி சம்பாதிப்பதால் அவர்களை விட்டுவிட்டேன். அந்த 3 பேரும் ஒருவரை குறித்து வதந்திகளை பேசி சம்பாதிக்கின்றனர். இந்த 3 நபர்கள் 3 குரங்குகள் போன்றவர்கள். நான் இப்போது பேசுவதால் கூட அவர்கள் பிரபலமாக வாய்ப்புள்ளது என்றார்.

பின்னர் நயன்தாரா தான் பணிபுரிந்த இயக்குநர்கள் பற்றி பேசும் போது, ”நான் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் போன்ற சூப்பர்ஸ்டாருடன் ஓர்க் பண்ணிவிட்டேன். அப்போதெல்லாம் அவர் அவ்வளவு பிரபலமான நடிகர் என எனக்கு தெரியாது. மேலும் நான் வேலை செய்த படங்களில் எனது இயக்குநர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டார்கள்.நான் தம்பியாக நினைக்கும் அட்லீக்காக ஜவான் படத்தில் ஷாருக்கான் படத்தில் நடித்தேன். அப்படத்தில் நடித்த போது ஷாருக்கான் என்னை நன்றாக பார்த்து கொண்டார்” என்று நயன்தாரா கூறினார்.

நயன்தாரா 3 குரங்குகள் என்று பேசியது, அந்தணன் சக்திவேல் மற்றும் பிஸ்மி பற்றி என்று செய்திகள் வெளியாகி உள்து. தனுஷ் பற்றியும் வலைப்பேச்சு யூடியூப் சேனல் பற்றியும் நயன்தாரா பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.