விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இந்த ஆண்டு ஒரு படமும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் விஷ்ணு நடிக்கவிருக்கும் எப்.ஐ.ஆர் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் பிக்பாஸ் புகழ் ரைசாவில்சன் ஆகிய மூவர் நடிக்க உள்ளனர். இதில் ‘பிகில்’ பட நடிகை ரெபா மோனிகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்று கூறப்படுகிறது.
இந்த படம் தவிர விஷ்ணு ஏற்கனவே ‘ஜகஜ்ஜால கில்லாடி’ என்ற படத்திலும் விஷ்ணு நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது