அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பில்லா. இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’பில்லா 2’ சுமாரான வெற்றி பெற்றபோதிலும், ’பில்லா 3 என்ற படத்தை இயக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கட்பிரபு திட்டமிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் தெரிவித்த போது அந்த படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்திருந்தார். எனவே சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பில்லா 3 திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் சிம்பு, வெங்கட்பிரபு இணைந்த மாநாடு திரைப்படம் கடந்த ஒரு ஆண்டாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தற்போது சிம்பு ’பில்லா 3’ படத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ’பில்லா 3’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தகவலை மறைமுகமாக தனது டுவிட்டரில் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது: நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும், அருமை சகோதரர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி, விரைவில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.