பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் 25 வயது இளம் நடிகை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பிரோக்ஷ மேத்தா. இவர் தன்னுடைய வீட்டில் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவருக்கு குடும்ப பிரச்சினை மற்றும் காதல் பிரச்சினை ஏதுமில்லை என்றும் கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
தற்கொலைக்கு முன் அவர் கடிதம் எதுவும் எழுதி இருக்கிறாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவரது மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவருக்கு கடைசியாக அழைப்பு விடுத்த நபர் யார் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தொலைக்காட்சி இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்தி தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது