கடந்த 1995ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் பாட்ஷா. ரஜினியின் திரைப்பட வரலாற்றில் அவருக்கு அதிகப்படியாக மாஸ் ஏற்றிய படங்களில் இதுவும் ஒன்று.
இன்றும் டிவிக்களில் எத்தனை முறை இந்த படத்தை ஒளிபரப்பினாலும் ஆவென வாய் பிளந்து பார்ப்போர் ஏராளம். அந்த அளவு இப்படத்துக்கு ரசிகர்கள் உண்டு.
ரஜினியை வைத்து அதற்கு முன் ஊர்க்காவலன், பணக்காரன், மூன்று முகம் படங்களை சத்யா மூவிஸ் தயாரித்து அது மிகப்பெரும் வெற்றிப்படமானது அது போலவே இந்த படமும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாஸ் ஹிட் ஆன இப்படத்தின் 25 வருடம் வரும் ஜனவரியில் வர இருக்கிறது.
இதை ஒட்டி இந்த படம் டிஜிட்டலில் வரும் டிசம்பர் 11 சென்னையின் சில முக்கிய திரையரங்குகளில் விழா கொண்டாட்டத்திற்காக திரையிடப்படுகிறது.