துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் எழில். இப்படம் 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது.
இவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை இந்த படம் பெற்று கொடுத்தது. இயக்குனர் எழில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சென்றுதமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி இயக்குனரானவர்.
துள்ளாத மனம் துள்ளும் படத்துக்கு பிறகு பூவெல்லாம் உன் வாசம்,ராஜா, பெண்ணின் மனதை விட்டு படங்களை இயக்கினார் இதில் பெண்ணின் மனதை தொட்டு மட்டுமே கொஞ்சம் நன்றாக சென்றது. அஜீத் நடித்த பூவெல்லாம் உன் வாசம் குடும்ப படம் என்றாலும் ஓவர் சென் டி மெண்ட் காட்சிகளால் இப்படம் எடுபடவில்லை.
பின்பு சில வருடம் இடைவெளி விட்டு தீபாவளி படம் இயக்கி இருந்தார். இதுவும் கொஞ்சம் சுமாரான படமே. இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு இது.
இப்படியே தொய்வாக சென்று கொண்டிருந்த எழில் திடீரென தன் பாணியை மாற்றி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மனம் கொத்தி பறவை படத்தை இயக்கினார்.
அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றது என்றால் மிகையாகாது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தேசிங்கு ராஜா, வெள்ளக்கார துரை என பல நகைச்சுவை படங்களை இயக்கியுள்ள இயக்குனர் எழில் திரையுலகில் 20 ஆண்டை நிறைவு செய்து விட்டாராம்.