இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அதில் முதற்கட்ட வாக்கெடுப்பில் தேர்வாகி இருக்கிறார். உலக அளவில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது போற்றப்படுகிறது. ஒவ்வொரு கலைஞனின் உச்சபட்ச ஆசை ஆஸ்கர் விருதினை எப்படியாவது பெற வேண்டும் என்பது தான். இப்பேர்ப்பட்ட ஆஸ்கர் விருதுக்காக கடினமாக உழைக்கும் கலைஞர்கள் உலக அளவில் பலர் இருக்கின்றனர்.
இந்தியாவினைப் பொறுத்தவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதினைப் பெற்று தமிழர்களுக்கும், ஒட்டுமொத்த சினிமாத் துறைக்கும் பெருமை சேர்த்தார். இந்திப் படமான ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் ஜெய்ஹோ பாடலுக்காக கடந்த 2009-ல் ஆஸ்கர் விருதினைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது மீண்டும் 2025-ம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. பிரித்விராஜ் நடிப்பில் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியான ஆடு ஜீவிதம் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் சிறந்த இசைக்கான பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது முதற்கட்ட வாக்கெடுப்பில் தேர்வாகி இருக்கிறார்.
ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வசூலித்த புஷ்பா 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆடு ஜீவிதம் படத்தில் இடம்பெற்ற Istigfar, Puthumazha ஆகிய பாடல்கள் ஆஸ்கர் விருது சிறந்த பாடல் பரிவில் பங்கேற்றுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த பின்னணி இசைப்பிரிவில் 146 படங்கள் போட்டியில் உள்ளன. இவற்றில் வாக்கெடுப்பு நடத்தி இறுதியாக 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை ஆகியவை அடுத்தகட்டத்திற்குத் தேர்வாகும். அந்த வகையில் ஆடு ஜீவிதம் படம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமானால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஓர் ஆஸ்கர் நிச்சயம்.
இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் அவரது இசையின் வடிவம் முற்றிலும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதுதான். இனம், மொழி, நாடு, கலாச்சாரம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் உலக அளவில் பேசப்படும். இதனால் தான் அவரை விருதுகள் அலங்கரிக்கின்றன. ஆஸ்கர், தேசிய விருதுகள், கிராமி விருது, கோல்டன் குளோப் விருது என அத்தனை விருதுகளுக்கும் சொந்தக் காரராக ஏ.ஆர்.ரஹ்மான் விளங்குகிறார்.