தமிழ்த்திரை உலகைக் கலக்க வருகிறது 2023 தீபாவளி ரிலீஸ் படங்கள்

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வெளிவரும் படங்கள் என்றால் ரசிகர்களுக்குக் குதூகலம் தான். அந்த வகையில் வரும் இந்தத் தீபாவளிக்கு என்ன என்ன படங்கள் வருகின்றன என்று பார்ப்போம்.

ஜப்பான்

பொதுவாக ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் கொஞ்சம் குறும்புத்தனம் கலந்து இருக்கும். முதலில் இவர் இயக்கியது ஜோக்கர் படம். அடுத்து கார்த்தியின் சூப்பர்ஹிட் படம் சர்தார்க்குப் பிறகு வெளிவர உள்ள படம்.

நகைச்சுவை கலந்து களைகட்டப் போகும் படம் என்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

JT XX
JT XX

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த படம். படத்தில் இருவரும் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கின்றனர். படத்தோட டீசர் அடிதடியாக உள்ளது. 75ல நடக்குற படமா இருக்கும். அங்கே இருந்து 2023க்கு கதை நகர்கிறதா என்று தெரியவில்லை.

துருவநட்சத்திரம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள அதிரடி படம். நீண்ட நாள்களுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம். இப்ப வருது… அப்ப வருதுன்னு சொன்னாங்க. ஆனா கடைசில இந்தத் தீபாவளிக்குக் கண்டிப்பா வரும்னு சொல்றாங்க.

Captain miller 1
Captain miller

கேப்டன் மில்லர், அயலான் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த விசேஷங்களில் வெளிவரும்.

கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் வருகிறார். அதே போல் படத்தில் இடம்பெறும் யுத்தக்காட்சிகளும் அருமை.

இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இந்தப் படத்திலும் ஜெயிலர் வில்லன் விநாயகன் நடிக்கிறார்.

cats
Ayalon

அயலான் படம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வர உள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் முழுக்க முழுக்கக் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால் படம் வெளியாகக் காலதாமதம் ஆகிறது.