கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ப்ரெண்ட்ஸ் இதில் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இதில் வடிவேல் தலையில் சுத்தியல் விழும் காமெடி ஒன்று உள்ளது.படம் வந்த நேரத்தில் குபீர் சிரிப்பை இந்த காமெடி வரவழைத்தது.
இந்த நிலையில் பிரெண்ட்ஸ் படத்தின் இந்த காட்சி 19 ஆண்டுகள் கழித்து ப்ரே ஃபார் நேசமணி என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் கடந்த மே மாதம் ட்ரெண்ட் ஆனது.இந்த ட்ரெண்டுக்கு காரணம் அருப்புக்கோட்டையை சேர்ந்த குசும்புக்கார இளைஞர் விக்னேஷ் என தெரிய வந்தது.
பாகிஸ்தானில் உள்ள `சிவில் இஞ்சினியர்ஸ் லேனர்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, உடனே நம்மாளி வினேஷ் `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கூறவும் ஒரு நபர் ப்ரே பார் நேசமணி என அடுத்ததாக வந்து கமெண்ட் செய்ய இது என்ன ஏதுன்னு தெரியாமல் அனைவரும் கமெண்ட, தமிழ்நாடு முழுவதும் வேகமாக வைரல் ஆனது. தமிழ்நாட்டில் ட்ரெண்டாகி பின்பு இந்தியாவாகி பின்பு இந்த ஹேஸ் டேக் உலக வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
2019ன் மிக பரபரப்பான அதே நேரத்தில் ஒன்றுமில்லாத விசயத்துக்காக மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிகழ்வு