உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா, இத்தாலிக்கு பிறகு தற்போது அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 108 நபர்கள் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 லட்சத்தை தாண்டுகிறது. அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.