சினிமாவில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமாகி வருஷம் 16, சின்னத்தம்பி உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பு.
அதே போல் முறைமாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமாகி உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ,அருணாச்சலம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி.
நடிகை குஷ்புவும் சுந்தர் சியும் நீண்ட நாட்கள் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளாக சினிமாவில்தொடரும் குஷ்பு சுந்தர் சிக்கு இன்று திருமண நாள் அதை சுந்தர் சி இன்று நினைவு கூர்ந்துள்ளார்.