அலைபாயுதேவுக்கு இன்றுடன் 20 வயதாம்

நடிகர் மாதவன் நடித்த முதல் தமிழ் படம் அலைபாயுதே. இந்த படம் வருவதற்கு முன்பே இவருக்கு ரசிகைகள் அதிகம் இருந்தார்கள். மேடி என்று செல்லமாக ரசிகைகளால் அழைக்கப்பட்டார்கள். மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் வித்தியாசமான கதையம்சத்தில்…

நடிகர் மாதவன் நடித்த முதல் தமிழ் படம் அலைபாயுதே. இந்த படம் வருவதற்கு முன்பே இவருக்கு ரசிகைகள் அதிகம் இருந்தார்கள். மேடி என்று செல்லமாக ரசிகைகளால் அழைக்கப்பட்டார்கள்.

33f03055578d23472d267d47cd8d4438

மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் வித்தியாசமான கதையம்சத்தில் இப்படம் உருவாகி இருந்தது. தாலி கட்டிய காதலர்கள் இருவரும் சூழல் சரியாகும் வரை அவரவர் வீட்டில் வாழ்வதும் சில எதிர்பாராத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதும்தான் கதை.

மாதவன், ஷாலினி நடிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. பச்சை நிறமே,சினேகிதனே, காதல் சடுகுடு,செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம்

வெகுஜன ரசிகர்களை இப்படம் இன்றளவும் கவரவில்லை என்பது ஏற்றுகொண்டே ஆக வேண்டிய உண்மை. ஆனால் ஏ சென் டர் என்று சொல்லக்கூடிய மாநகர வாசிகளை இப்படம் மிகவும் திருப்திப்படுத்தியது.

அவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது உண்மையான விசயம். திரையுலகில் இப்படம் வந்த பின் மாதவனின் மார்க்கெட் அதிகமாக விரிவடைந்தது.

இன்றுடன் இப்படம் வந்து 20வருடம் ஆச்சாம். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 14ல் இப்படம் வெளிவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன