கொரோனா லாக் டவுனால் எல்லா தொழில்களும் தடைபட்டு கிடக்கிறது திரைப்பட தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல.
சின்னத்திரை, பெரியதிரை ஷூட்டிங் எதுவும் நடக்காத நிலையில் , சின்னத்திரை ஷூட்டிங்குகளுக்கு கடந்த வாரம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 20 பேர் மட்டும் ஷூட்டிங் வைத்து கொள்ளவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இது குறித்து நடிகை குஷ்பு கூறும்போது. 20 பேரை மட்டும் வைத்து ஷூட் நடத்த அரசு சொல்லியுள்ளது. இது எப்படி சாத்தியம். 7 நாட்களாகியும் எங்களால் ஷூட் செய்ய முடியவில்லை. ஏனென்றால் யாரும் பணியாளர்கள் வரவில்லை.
பெப்சி சார்பில் 35 பேர் நடிகர் நடிகைகள் 8 பேர் அவர்கள் உதவியாளர்கள் 4 பேராவது வருவார்கள் 12 பேர்களாவது வருவார்கள் இவர்கள் இல்லாமல் எப்படி ஷூட் நடத்த முடியும் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.