தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில். அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சுமாரான வசூலைப் பெற்றது
இந்த நிலையில் குறுகிய இடைவெளிகளில் இரண்டு 2 தனுஷ் படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் அடுத்ததாக அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த ’சுருளி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் ஒரே ஷெட்யூலில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வந்த பட்டாஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே தொழில்நுட்ப பணிகளும் நடைபெற்று வந்ததால் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தை ஜனவரி மாத இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் செய்தியை கேட்டு தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உற்சாகத்தில் உள்ளனர்