இந்தியன் 2 படத்தில் அனிருத்துக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி? ஒரு ஆச்சரிய தகவல்

பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் ஏஆர் ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரைத் தவிர வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக ஏஆர் ரகுமான் பிசியாக இருந்தால் மட்டுமே அவர்…


cbe1515e7f0e32607cddaa88073fd957

பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் ஏஆர் ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரைத் தவிர வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக ஏஆர் ரகுமான் பிசியாக இருந்தால் மட்டுமே அவர் அடுத்ததாக ஹரிஸ் ஜெயராஜை தேர்வு செய்வார். ஆனால் இந்தியன் 2 படத்தில் இருவருமே இல்லாமல் அனிருத்தை இசையமைப்பாளராக ஷங்கர் ஒப்பந்தம் செய்து இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர், அனிருத்தை தேர்வு செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் ஷங்கர் மகனும் அனிருத்தும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்றும், இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றும் ஷங்கரின் மகன் அனிருத்தை பரிந்துரை செய்ததால் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அனிருத்தின் இசைப்பணிகள் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே திருப்தி இல்லை என்றும் அதனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன