கடந்த 2004ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் உலகம் தெரிந்தவரானார் கண்பார்வையற்ற கோமகன் என்பவர். இவர் ஒரு இசைக்குழு நடத்தி வந்துள்ளார்.
நடிகர் சேரனின் முயற்சியால் இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்து பாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடல் ஹிட் ஆகிவிடவே இவரும் ஹிட் ஆனார். ஆட்டோகிராஃப் பட புகழ் என இவரது கலைக்குழுவுக்கு பின்னே சேர்த்துக்கொள்ளும் அளவு புகழடைந்தார் இவர்.
இந்த ஊரடங்கு நேரத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் யாரிடமாவது பேசி வருகின்றனர். அப்படியாக இயக்குனர் சேரன், பாடகர் கோமகனிடம் பேசினாராம். ஆட்டோகிராஃப் படம்தான் தங்களுக்கு வாழ்க்கை கொடுத்த திரைப்படம் எனவும், சேரன் அடுத்து ஆட்டோகிராஃப் 2 இயக்கினாலும் தங்களுக்கு திரும்ப பாட வாய்ப்பு தரவேண்டும் என சேரனிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டாராம் இவர்.