தமிழ்சினிமாவின் சிறந்த வருடம் 1992. அந்த வருடத்தில் தான் 4 பெரிய படங்கள் வந்தன. தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட படங்கள் அவை தான். ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. அவற்றில் 2 பிளாக் பஸ்டர் ஹிட். அவற்றில் 1 பேன் இண்டியா ஹிட். இன்னும் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
தேசிய விருதுகளையும் வென்றது. இன்னொரு சுவாரசியமும் இந்த ஆண்டில் அரங்கேறியது. ஒருவருக்கொருவர் நடிக்கும் படங்கள் அதன் முந்தைய படங்களைக் காட்டிலும் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் என்றானது. அதனால் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததோடு மட்டுமல்லாமல் படங்களும் நல்லா ஓடின. அவற்றில் குறிப்பிடத்தக்க படங்களைப் பார்ப்போம்.

அந்த ஆண்டின் பொங்கலுக்கு 2 சூப்பர்ஹிட் படங்கள் வந்தன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மன்னன், விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர். இவை இரண்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட். வெள்ளி விழா படங்கள். இவற்றில் சின்னக்கவுண்டர் படம் 250 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. குறிப்பாக மன்னன் படத்தில் ரஜினிக்குப் போட்டியாக விஜயசாந்தி நடித்துக் கலக்கியிருந்தார்.
அதே போல் ரஜினியுடன் கவுண்டமணியும் இணைந்து நடித்து கலக்கினார். அதுமட்டுமல்லாமல் குஷ்பூ, மனோரமா, பண்டரிபாய், விசு என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபு சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். பி.வாசுவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள் கிளப்பின.
படத்தில் ரஜினிகாந்த் சொந்தக்குரலில் அடிக்குது குளிரு என்ற பாடலைப் பாடினார். இது தான் அவரது முதலும் கடைசியுமான பாடல்.
அதே போல் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படம் உண்மையிலேயே செம படம் தான். விஜயகாந்த் இதுவரை இல்லாத அளவில் புது கெட்டப்புடன் வந்து வேட்டி சட்டை, துண்டு சகிதம், தலையை மழித்து சீவிய ஸ்டைலில் வந்து பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்வார்.
கிராமிய படம், நல்ல நகைச்சுவை, சென்டிமென்ட், காமெடி என பல வகையிலும் படம் பட்டையைக் கிளப்பியது. கண்ணுபட போகுதையா சின்னக்கவுண்டரே என்ற ஓபனிங் சாங்கே விஜயகாந்துக்கு மாஸை அதிகரிக்கும்.
ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் இளையராஜாவின் இசையில் படமும் பாடலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டின.

அதன்பிறகு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. தொடர்ந்து உலகெங்கும் 17 கோடியை அள்ளியது. இதுதான் அப்போதைக்கு அதிக வசூலை அள்ளிய படம். தமிழகத்தில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூலித்தது. தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். சூப்பர்ஸ்டார் எழுத்துகளுக்கு இவர் போட்ட தீம் மியூசிக் அந்த காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து கமல்ஹாசனின் தேவர் மகன் படம் களத்தில் குதித்தது. இது மிகப்பெரிய பிளாக் பஸ்டர் மூவி. கமலுடன் இணைந்து சிவாஜி, இளையராஜா கைகோர்த்த படம். கமலின் சொந்தப் படம் என்பதாலும், அவரது திரைக்கதை என்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தன.
நாசர், காகா ராதாகிருஷ்ணன், வடிவேலு, கௌதமி, ரேவதி என அனைவருமே அட்டகாசமாக நடித்து இருந்தனர். படத்தில் உடைப்பால் வரும் வெள்ளப்பெருக்கு யதார்த்தமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் கமல், சிவாஜி இணைந்து நடித்த படம் என்பதால் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது.
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றானது. மேலும் இதன் தெலுங்கு பதிப்பும் செம ஹிட். ஏன்னா இது அண்ணாமலை படத்தின் வசூலையும் தாண்டி உலகளவில் சாதனை படைத்த தமிழப்படமானது.

சிறந்த துணை நடிகையாக ரேவதிக்கும், சிறந்த பெண் பாடகியாக எஸ்.ஜானகிக்கும், சிறந்த ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக சிவாஜிக்கும், தமிழில் வந்த சிறந்த திரைப்படத்திற்காக கமலுக்கும், இயக்குனர் பரதனுக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்காக என்.பாண்டுரங்கனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


