இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வெயில். கடந்த 2006ல் வெளியான படம் இது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2004ல் பரத் நடிப்பில் காதல் படம் வெளியானது.
சரியாக காதல் வெளியாகி இரண்டு வருடத்துக்குள் பரத் நடிப்பில் தயாரிப்பாளர் ஷங்கருக்கு மற்றுமொரு கலெக்சனை கொடுத்த படம் இது.
இதில் பரத் கதாநாயகன் என்றாலும் அவருக்கான கதாபாத்திரத்தின் வலு கம்மியாகத்தான் இருந்தது. இப்படத்தில் பசுபதிக்கே நடிக்க அதிக வாய்ப்பு இருந்தது.
சிறுவயதில் ஊரை விட்டுப்போன பசுபதி வேறு ஊருக்கு சென்று கஷ்டப்பட்டு, தியேட்டர் ஆபரேட்டராக இருந்து ஒரு பெண்ணை காதலித்து அவர்கள் வீட்டில் அடி வாங்கி, கால மாற்றத்தால் தியேட்டர் மூடப்பட்டு திரும்பவும் ஊருக்கே வந்து பரிதாபமாக மரணிப்பதுதான் கதை.
பசுபதியை திட்டிக்கொண்டே இருக்கும் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் ஜி எம் குமார் நடித்திருந்தார்.
ஆல்பம் என்றொரு படத்தை இயக்கி தோல்வி கண்டிருந்த இயக்குனர் வசந்தபாலனை பெரிய இயக்குனராக அடையாளப்படுத்திய படம் இது.
அதுபோல் பட்டாசு பாலு, ஏய் இன்னாடி இன்னா என சவுண்ட் உயர்த்தி கொடூரமான கதாபாத்திரங்களை செய்து கொண்டிருந்த பசுபதிக்கு இப்படம் பசுபதியால் இயல்பான நல்ல கதாபாத்திரத்தையும் செய்ய முடியும் என உணர்த்தியது.
இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தில்தான் அறிமுகமானார்.
என்று மறக்க முடியாத இப்படம் இன்றுடன் 13 வருடங்களை கடந்துள்ளது.