இளையராஜாவின் அந்நிய மொழி பாடல்கள் ஹிட் அடித்த வரிசையில் இன்று நாம் 13ம் பாகத்தை பார்த்து வருகிறோம்.
நடிகர் மோகன் 80களில் தமிழின் மிகப்பெரிய நடிகர். அவரது கால்ஷீட்டுக்கு தவம் கிடந்தவர் அதிகம். அவர் நடித்தாலே படம் ஹிட்டு என்ற நிலையில் தமிழ் சினிமா இருந்தது. அப்படிப்பட்ட மோகன் அந்த பிஸியான நேரத்தில் தெலுங்கில் நடித்து ஹிட் ஆன படம்தான் ஆலாபனா.
வழக்கம்போல இளையராஜா வெற்றிக்கூட்டணியான வம்சி இளையராஜா கூட்டணியில் இப்படம் உருவானது. வம்சி இப்படத்தை இயக்கி இருந்தார்.
பாடல்கள் எல்லாம் ஹிட் குறிப்பாக ஆவேசமந்தா, ஆக்கனுலலோ என்ற பாடல்கள் தெறி ஹிட் ஆகின. அதில் ஆக்கனுலலோ பாடலில் இளையராஜா பல மேஜிக் செய்திருந்தார்.
ரயில் பாதையில் தண்டவாளத்தில் அடித்து ஜதி சொல்வது அதற்கெற்ற வகையில் ஜானகி, எஸ்.பி.பி வாய்ஸ் என வித்தியாசமாக அப்பாடலை அமைத்திருந்தார்.
தமிழில் இப்படம் பெரிய ஹிட் ஆகவில்லை. இருப்பினும் இளையராஜா இசையில் பாடல்கள் பேசப்பட்டது. ஆவேசமந்தா என்ற பாடல் தமிழில் யாரோடு யாரோ நீ எந்த ஊரோ என்று வந்தது பெரும் ஹிட் ஆனது.
1985ம் ஆண்டு இப்படம் வந்தது. மோகனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்திருந்தார்.