சமந்தா நடிப்புக்கு 10 வயதாம்

சமந்தா தமிழில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிறதாம். தமிழில் குறைந்த வருடங்களிலே பல விதமான சினிமாக்களில் நடித்து நிறைந்த புகழ்பெற்றவர் சமந்தா. பாணா காத்தாடி மூலம் தான் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு…

சமந்தா தமிழில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிறதாம். தமிழில் குறைந்த வருடங்களிலே பல விதமான சினிமாக்களில் நடித்து நிறைந்த புகழ்பெற்றவர் சமந்தா.

238f436b87b88498b24a86301b63b1fc

பாணா காத்தாடி மூலம் தான் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியலானார்.ஆனால் அதில் நடிப்பதற்கு முன்பே ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கத்தில் மாஸ்கோவின் காவேரி படத்தில் நடித்திருந்தார் இப்படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

தமிழில் விஜய், தனுஷ், விஷால் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் தங்கமகன், தெறி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சில வருடங்கள் முன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து ஆந்திராவில் செட்டிலானார்.

தமிழ்நாட்டில் சென்னையை சொந்த ஊராக கொண்டவர் இவர்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சமந்தா நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிறதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன