உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா உலகத்தையே புரட்டி போட்டு விட்டது என கூறலாம்.
இந்தியாவில் பயப்படும் வகையில் பாதிப்புகள் இல்லை என்றாலும் அதனால் ஏற்பட்ட துயரங்கள் அதிகம்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை கூறும் தகவலும் கொரோனா பற்றிய பீதியை சற்று போக்குகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வரும் நபர்களில் 2.9% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 385 அரசு மையங்கள் மற்றும் 158 தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் 0.2% மட்டுமே இறப்பு விகிதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த தகவலாகும்