வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?

By Aadhi Devan

Published:

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு என்று உருவான பாடலாசிரியர் என்று வாலியை கூறலாம். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்களுக்கு வாலி தான் பாடலாசிரியர். ஆனால் ஒரு முறை எம்ஜிஆர் அவர்களுக்கும் வாலி அவர்களுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு படக்காட்சியின் சூழ்நிலையை வாலியிடம் கூறி பாடல் எழுத எம்ஜிஆர் கேட்டுள்ளார். ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக இருக்கும் மனநிலையில் மக்களின் மனதை புரிந்து கொண்டு ஒரு வீரன் எடுத்துச் சொல்கிறான்.

408a4e0072b66f5f7b9c62a20a9c1a82

அரசனை விட மேம்பட்ட ஒரு வீரன் இருக்கிறான். அவனுடைய எண்ணம் எப்படி இருக்கும் என்பது மாதிரியான காட்சிதான் அது. பல்லவி எழுதுவதில் சிறந்து விளங்கிய வாலி முழு கதையும் ஒரு வரியில் சொல்லும் திறமை உடையவர். அப்படி வாலி எம்ஜிஆர் சொன்ன சூழ்நிலைக்கு ஏற்ப பாடலின் இரண்டு வரியை எழுதியுள்ளார். ஆனால் அந்த வரியினால் இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆண்டவன் கட்டளை முன்னாலே உன் அரச கட்டளை என்னவாகும். இந்த வரிதான் வாலி அவர்கள் எழுதியது.

22 62ee0b9883581

இதனை படித்த எம்ஜிஆருக்கு அளவுக்கு அதிகமாக கோபம் வந்தது. வாலியிடம் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் சொன்ன கதையை தான் நான் எழுதி இருக்கிறேன் என வாலி கூறியுள்ளார். அப்போது எம்ஜிஆர் ஆண்டவன் கட்டளை என்றால் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு வாலி ஆண்டவனின் கட்டளை என்று கூறியுள்ளார். அதற்கு உங்களுக்கு வேறு ஏதும் தோன்றவில்லையா என்று கேட்ட எம்ஜிஆர் ஆண்டவன் கட்டளை என்பது சிவாஜி கணேசன் நடித்த படம்.

mgr vali

சிவாஜி கணேசன் பிரமாதமாக நடித்த படம் ஆண்டவன் கட்டளை என்று எல்லோரும் பேசப்படுகின்ற அந்த படத்திற்கு முன்னாடி இந்த அரச கட்டளை நீ எடுக்கிற படம் என்னவாகும் என்று சொல்லி என்னை குறைத்து மதிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள். அதாவது சிவாஜி முன்னாடி நீ எம்மாத்திரம் அப்படி என்றதுக்காக நீங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன வாலி தான் கதைக்காக தான் இதை எழுதினேன் நான் நீங்கள் கூறியது போல யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

image 2

இதற்கு எம்ஜிஆர் நீங்கள் என்ன யோசித்து எழுதினீர்கள் என்பது இல்லை படம் பார்ப்பவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று கேட்டதோடு வாலி இந்த படத்திற்கு பாடல் எழுத வேண்டாம் என்று அனுப்பிவிட்டார். அதன் பிறகு முத்துக்குத்தன் என்ற கவிஞன் எம்ஜிஆர் அவர்களால் பாடல் எழுத தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்ற பாடல் தான் அரசகட்டளை திரைப்படத்தில் இடம் பெற்றது.