ரஜினி சினிமாவில் நடிக்க துவங்கியபோதே கமலுடன் இணைந்து பல படங்களிலும் நடித்தனர். ஆனால், ஒருகட்டத்தில் இருவரும் தனியாக நடிக்க துவங்கினார். கடந்த 45 வருடங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அதேநேரம், தற்போது அது நடந்திருக்கிறது. ரஜினியும், கமலும் இணையும் புதிய படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினி இப்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் முடிந்த பின்னர் அவர் கமலுடன் இணையவிருக்கிறார்.
இந்நிலையில்தான், இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அதில், ரஜினி, கமல் இருவரின் கைகளை மட்டும் காட்டியிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் புரமோ வீடியோ நாளை 12.07 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த போஸ்டர் ரஜினி, கமல் ரசிகர்களிடம் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

