வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 33 காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கு நேரடி நியமனமாக வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு கல்லூரிகள்…

TNTRB

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 33 காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தப் பணிக்கு நேரடி நியமனமாக வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை படி பல்வேறு கல்லூரி மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன்படி தமிழகத்தில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை முதல் (ஜூன் 6-ம் தேதி முதல்) விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 5.

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.