தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 இளங்கலை பட்ட படிப்புகள் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் மே 29 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இன்று முதல் (ஜூன் ஒன்றாம் தேதி) பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இது ஜூன் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொது பிரிவினருக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
