எல்லாருக்கும் சம்பளம் செட்டில் செஞ்சாதான் ஷுட்டு.. இல்லனா பேக்கப்!.. இப்படியெல்லாமா எம்ஜிஆர் பண்ணுவாரு..?

தமிழ் திரை உலகின் சிறந்த அடையாளங்களில் ஒருவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தன்னுடைய திரை வாழ்க்கையில் இமாலய இலக்கை அடைந்ததன் காரணமாக பிற்க்காலத்தில் அரசியலிலும் பிரகாசித்தார். தன்னுடைய திரை பயணத்தை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் நாடக நடிகராக ஆரம்பித்து படிப்படியாக துணை வேடம் பின் கதாநாயகன் என தன்னை உயர்த்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் தனக்காக வாழ்ந்ததை தாண்டி பிறருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. தேடி அந்தவருக்கும் உதவி செய்வார் தேடி போய் உதவி செய்வதில் இவருக்கு நிகர் இவரே.

mgr

இவை அனைத்தும் பொது வாழ்க்கைக்கு வந்தது பிறகு அல்ல அவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே இத்தகைய பண்புகளை கொண்டிருந்திருக்கிறார். அப்படி படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களின் நலனில் அக்கறை காட்ட தவறியதில்லை என்று இவருடன் பல படங்களில் குழந்தை வேடங்களில் நடித்த நடிகை குட்டி பத்மினி நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி உள்ளார். இவர் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகை ஆவார்.

குட்டி பத்மினி தன்னுடைய மூன்று வயது முதலே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அக்காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக விளங்கிய சிவாஜி கணேசன்,எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என அனைத்து ஹீரோகளுடன் நடித்துள்ளார்.

kutty padmini

இதில் எம்.ஜி.ஆரை பற்றிய கூறியதாவது, “படபடப்பு தளத்தில் சக நடிகர்களிடம் சகஜமாக பழகுவார். அதுமட்டுமின்றி படத்தில் வேலை செய்யும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களிடமும் நலன் விசாரித்து சிரித்துப் பேசுவார். எம்.ஜி.ஆர் எப்பொழுதும் இறுதி ஷெடியூலில் மட்டுமே க்ளைமேக்ஸ் காட்சிகளில் நடிப்பார். அப்பொழுது சக நடிகர்களிடம் தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற்றுக் கொண்டீர்களா..? என்று கேட்பார் அதற்கு செய்கையில் இல்லை என்று சொல்லிவிட்டால் உடனே காரில் புறப்பட்டு சென்று விடுவார். அதேபோல் மீண்டும் வந்தவுடன் கேட்பார் நடிகர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் இல்லையெனில் பேக்கப் தான்” என்று சித்ரா லட்சுமணன் நேர்காணலில் குட்டி பத்மினி கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
mgr