என்.டி.ஆர் கட்சிக்கு பெயர் வைத்தவரே எம்ஜிஆர் தான்.. இருவருக்கும் உள்ள ஆழ்ந்த நட்பு..!

தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ஆர் சினிமா புகழை வைத்து ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு சினிமாவில் இருந்து வந்தவர்கள் யாருமே புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கவில்லை. தமிழகத்தில் எப்படி எம்ஜிஆர் நல்ல கேரக்டர்களை மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்தாரோ, அதேபோல் தெலுங்கில் என்.டி.ஆர் புராண வேடங்களில் குறிப்பாக ராமர், கிருஷ்ணர் வேடங்களில் நடித்து அனைவர் மனதில் இடம்பெற்றார்.

இருவருமே திரையரங்கில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனி கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆகி ஏழை எளிய மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். எம்ஜிஆர் மற்றும் என்.டி.ஆர் இடையே ஆழ்ந்த நட்பு இருந்தது. ஒருவருக்கு ஒருவர் மதிப்பும் மரியாதையும் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்த நிலையில் எம்ஜிஆரை வைத்து சில படங்களை தயாரித்த கோவை செழியன் என்பவர் அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவர் தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து திரைப்படத்தை தயாரிக்க விரும்பினார். ஆனால் ராமராவுடன் அவருக்கு நெருக்கம் கிடையாது, பழக்கமும் கிடையாது.

ஒரே நாளில் வெளியான எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள்.. ஆனால் வெற்றி பெற்றதோ ஆதிபராசக்தி..!

இந்த நிலையில் எம்ஜிஆரை அணுகி என்டி ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன். நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில், நான் பேசி விடுகிறேன், நீங்கள் நேரடியாக சென்று என்டி ராமராவை பாருங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறினார். அவர் என்டி ராமராவை போய் சந்தித்தபோது எம்.ஜி.ஆர் சொல்லி வந்திருக்கிறேன் என்று கூற உடனே என்டி ராமராவ் சிரித்துக் கொண்டே படப்பிடிப்பை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டபோது கோவை செழியன் ஆச்சரியமடைந்தார்.

அந்த அளவுக்கு எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் இடையே மதிப்பும் மரியாதையும் இருந்தது. என்டி ராமராவ் கட்சி தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியையும் பிடித்து முதலமைச்சர் ஆகிவிட்டார். இந்த நிலையில் எம்ஜிஆர் பாணியில் தானும் ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த ராமராவ், எம்ஜிஆர் அவர்களிடம் முதன் முதலில் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற்காக வந்தார்.

சென்னையில் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் தான் என்.டி.ஆர் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அப்போது கட்சிக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என்று எம்ஜிஆர் கேட்டபோது தெலுங்கு ராஜ்ஜியம் என்று ராமராவ் பதில் சொன்னார். ஆனால் தெலுங்கு தேசம் என்று வையுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று எம்ஜிஆர் கூற அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து தான் எம்ஜிஆர் பரிந்துரை செய்த தெலுங்கு தேசம் என்ற கட்சி உருவானது.

அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?

அந்த கட்சி இன்று வரை ஆந்திராவில் பிரபலமான கட்சியாக உள்ளது. என்.டி.ராமராவ் பல பேட்டிகளில் எம்ஜிஆர் தான் தனக்கு வழிகாட்டி என்றும் அவர் தனது அண்ணனை போன்றவர் என்றும் அவரை பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் எப்படி எம்ஜிஆர் திறந்த வெளியில் பிரச்சாரம் செய்தாரோ அதேபோல் தான் ஆந்திராவில் என்டிஆர் ராமராவ் திறந்தவெளியில் பிரச்சாரம் செய்தார்.

ஆந்திர மாநில தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எம்ஜிஆரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதற்காக சென்னை வந்தார். அவருக்கு எம்ஜிஆர் வாழ்த்து தெரிவித்ததோடு தனது வீட்டில் விருந்தும் வைத்தார். அந்த விருந்தின் போது தான் சென்னை நகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரப்பட்டால் பிரச்சனை தீர்க்கலாம் என்று ராமராவிடம் கூறினார்.

நீங்கள் சொன்னால் மறுப்பேது எனவும், கண்டிப்பாக இந்த திட்டத்தை உருவாக்குவோம் என்று ராமராவ் சொன்னபோதுதான் தெலுங்கு கங்கை திட்டம் என்ற திட்டம் கடந்த 1983 ஆம் ஆண்டு உருவானது. இந்த திட்டம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்தது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் காலமானபோது என்டிஆர் மிகவும் உடைந்து போய்விட்டார். எம்ஜிஆர் மறைவின் மூலம் நான் எனது குருநாதரை இழந்துவிட்டேன் என்றும் எதையும் நுணுக்கமாகவும் தீர்க்கதரிசனத்தோடும் சிந்திக்க கூடியவர் எம்ஜிஆர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை தெலுங்கில் என்டி ராமராவ் ரீமேக் செய்து எம்ஜிஆர் கேரக்டரில் நடித்தார். அதேபோல் என்.டி.ஆரின் சில படங்களை ரீமேக் செய்து எம்ஜிஆர் நடித்தார். குறிப்பாக எங்க வீட்டு பிள்ளை, திரைப்படம் என்.டி.ஆர் நடித்த சூப்பர்ஹிட் தெலுங்கு படம். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, எம்ஜிஆர் என்.டி.ஆர் நட்பு என்பது புனிதமானது. இரு மாநிலங்கள் மிகச்சிறந்த முறையில் ஒற்றுமையாக இருந்ததற்கு இந்த இரு முதல்வர்கள் தான் காரணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews